தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மாலையில் மழை பெய்வதால், காலையிலேயே பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வர தொடங்கி உள்ளனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் வழக்கம் போல் தங்களது ÷ நர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலை பலத்த மழை பெய்து வீரபாண்டி ரோட்டில் சகதியாகி விட்டது. இதனால் மாலையில் கோயிலுக்கு வந்தால் மழையிலும் சகதியிலும் சிக்கி அவதிப்பட வேண்டி வரும் என்பதால், பக்தர்கள் காலையிலேயே கோயிலுக்கு வந்தனர்.