பதிவு செய்த நாள்
09
மே
2012
11:05
நாமக்கல்: ராசிபுரம் அருகே, பாச்சல் ஓங்காளியம்மன் பகவதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்றிரவு காவிரி தீர்த்தம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூச்சாட்டுதல், காப்புகட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, இன்று சந்தனக்காப்பு அலங்காரம், குண்டம் எடுத்தல், கண் திறப்பு அலங்காரம், நாளை ஸ்வாமிக்கு மாவு அலங்கார பூஜைகள் நடக்கிறது.அன்றிரவு குண்டம் பற்ற வைத்தல், அம்மன் திருவீதி உலா, சக்தி அழைத்தல், பூங்கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை பக்தர்கள் புனித நீராடி குண்டம் இறங்குகின்றனர்.தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 13ம் தேதி பூசாரி அழைத்தல், அம்மன் விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.