பள்ளிவாசலில் வழிபாடு தவிர்க்க வக்பு துறை வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2020 01:05
புதுச்சேரி; ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் வழிபாடுகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை சார்பு செயலர் சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட கலெக்டர், வக்பு செயலர் வழிகாட்டுதலின்படி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் இஸ்லாமிய மத தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், டவுன் காஜி கலந்து கொண்டு, ரம்ஜான் தினத்தன்று சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்த அனுமதி கோரினர்.மத்திய அரசின் தற்போதைய வழிகாட்டுதலின்படி, சமூக மற்றும் மத கூட்டங்கள், வழிபாடுகள் போன்றவைகளுக்கு தடை உள்ளது. எனவே பள்ளி வாசல்களில் மத வழிபாடுகள் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சமய நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் எவ்வித வழிபாடுகளும் நடத்த வேண்டாம் என்றும், இதுவரை இருந்தது போல அவரவர் இல்லங்களிலேயே வழிபாடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது .இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.