பதிவு செய்த நாள்
26
மே
2020
10:05
பிராட்வே : ஊரடங்கு காரணமாக, வீட்டின் மொட்டை மாடிகளில், முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24 நள்ளிரவு முதல், மே, 31 வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வீடுகளில் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். அனைத்து, பொது சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.சமீபத்தில், ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு, கடைகள் திறப்பிற்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், கூட்டம் கூட தடை தொடர்கிறது. இந்நிலையில், நேற்று, இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.வழக்கமாக, ரம்ஜான் என்றால், மசூதிகள் மற்றும் பிரமாண்ட மைதானங்களில், ஏராளமான முஸ்லிம்கள் ஒன்று கூடி, சிறப்பு தொழுகை நடத்துவர்இம்முறை, ஊரடங்கால், அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் எளிமையாக, தொழுகை நடத்தி, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். அதன்படி, மண்ணடி, கிருஷ்ணன் கோவில் தெருவில், த.மு.மு.க., மாவட்ட தலைவர் துறைமுகம் மீரான், தன் குடும்பத்தினருடன் வீட்டின் மொட்டை மாடியில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையின் போது, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இதே போல், பலரும் வீடுகளிலேயே தொழுகை நடத்தி, பண்டிகையை கொண்டாடினர்.