களக்காடு : களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளம் சவுந்திரபாண்டீஸ்வரர் கோயிலில் இன்று (11ம் தேதி) ருத்திர ஜெபம் நடக்கிறது. மேலகருவேலன்குளம் கோமதிஅம்பாள் சமேத சவுந்திரபாண்டீஸ்வரர் கோயிலில் இன்றும், நாளையும் ருத்திர ஜெபம் பூஜை நடக்கிறது. இன்று (11ம் தேதி ) காலை கணபதி ஹோமம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் ருத்திர ஜெபம், கோமதி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. மாலையில் சவுந்திர பாண்டீஸ்வரருக்கு 1008 குடும்ப தாராபிஷேகம், தீபாராதனை, நடராஜ மூர்த்திக்கு தாண்டவ அஷ்டோத்ர ஜெபநாம அர்ச்சனை நடக்கிறது. நாளை (12ம் தேதி) காலை ருத்திர ஜெபம், மகாசங்கல்பம், மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடராஜர், சிவகாமிஅம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருவனந்தபுரம் தெஜோமயா, ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.