தென்காசி : தென்காசி தட்சிணாமூர்த்தி கோயிலில் வரும் 17ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. குரு பகவான் வரும் 17ம் தேதி மாலை 6.27 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு தென்காசி ஆயிரப்பேரி ரோடு தட்சிணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. மறுநாள் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது. மாலையில் புஷ்பாஞ்சலி, இரவு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. புஷ்பாஞ்சலிக்கு புஷ்பங்கள் கொண்டு வரும் பக்தர்கள் அன்று மாலை 5 மணிக்கு முன்னதாக கொண்டு வரும்படி விழாக் கமிட்டியார் கேட்டுக் கொண்டுள்ளனர்.