சென்னை; மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்களை, இன்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை, இன்று முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், நோய் தீவிரமுள்ள பகுதிகளில் உள்ள, பாரம்பரிய சின்னங்களை திறப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என, தெரிவித்துள்ளது.