காரைக்கால்: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் இன்று திறக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் முதல்வர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது. 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் கோவில் இன்று திறக்கப்பட்டது.இதனால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் ராஜகோபுர வாசலில் உள்ள தானியங்கி கிருமி நாசின் இயந்திரம் மூலம் கைகளை நன்கு கழுவிய பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு செல்வது.சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் சென்று பகவானை தரிசனம் மேற்கொண்டு பின்னர் வெளியே செல்வதற்கு அனைத்து நடவடிக்கையும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து உள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.