பதிவு செய்த நாள்
08
ஜூன்
2020
02:06
தமிழகத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. இவற்றில், 1,586 கோவில்களுக்கு சொந்தமான, 1,359 குளங்கள் உள்ளன. கோவில்களை விட்டு தொலைவில் உள்ள, 1,068 குளங்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதும், துார்வாராமல் இருப்பதும் தெரியவந்தது. இவற்றில் பராமரிப்பு பணிகள் துவங்கினாலும், இடையிலேயே தொய்வு ஏற்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள, 100 கோவில்களின் குளங்களை, 20.62 கோடி ரூபாய் செலவில், புனரமைக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. விரைவில், இப்பணி முடிவடையும். எஞ்சியுள்ள கோவில்களின் குளங்களும், படிப்படியாக பராமரிக்கப்பட உள்ளன. தன்னார்வலர்களும், அரசின் அனுமதி பெற்று, குளங்களைப் புனரமைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -