விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கிராம மக்கள் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேல் பூட்டியிருந்ததால் கோவில் வளாகத்தில் முட்புதர்கள் மண்டியிருந்தன.இதனை கிராம மக்கள் சார்பில் பாபு ஜீவானந்தம் தலைமையில் தொழிலதிபர் செல்வம், முன்னாள் பேரூராட்சி சேர்மன் குமாரசாமி, துணை சேர்மன் சர்க்கார் பாபு, முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணன், சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கொண்ட குழுவினர் கோவில் வளாகத்தில் தொழிலாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.