சிதம்பரம்: முருகனின் அருள்பெற்ற பாம்பன் சுவாமிகள், சிதம்பரத்தில் தங்கியிருந்த இடத்தில் மடாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சமாதியில் பாம்பன் சுவாமிகள் அமர்ந்த நிலையில் கண்களைத் திறந்தவாறு காட்சியளிக்கிறார். இங்கு சுவாமிகள் அணிந்த ஆடை, ருத்ராட்ச மாலை, விபூதிப்பை பாதுகைகள் உள்ளன. வருடாந்திர குரு பூஜையின் போது இரண்டு நாட்கள், கந்த சஷ்டியின் போது மூன்று நாட்கள் மட்டுமே பக்தர்கள் இவற்றை தரிசிக்க முடியும். நேற்று இங்கு பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, விசாகம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.