பதிவு செய்த நாள்
12
ஜூன்
2020
01:06
அறநிலைய துறை தலைமையகத்தில் பணியாற்றும், எட்டுக்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில், அறநிலைய துறை தலைமையகம் இயங்கி வருகிறது. அங்கு, 280 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, அறநிலைய துறை தலைமையக ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர்.இந்நிலையில், தலைமையகத்தில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்தில், ஆய்வாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.
இதனால், அந்த பிரிவு மூடப்பட்டு, அங்கு பணிபுரியும் எட்டுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும், தலைமையக இணை கமிஷனர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. சமீபத்தில், திருவேற்காடு அம்மன் கோவிலுக்கு இடமாறுதலுக்கு சென்ற, இணை கமிஷனருக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, அவரின் கார் ஓட்டுனர், உதவியாளர், அக்கோவிலில் பணிபுரிபவர்கள் என, எட்டு பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து, தலைமையகம் முழுவதும், கிருமி நாசினி தெளிவிக்கப்பட்டது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.