Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யு -டியூப்பில் ராமானுஜர் ... 500 ஆண்டு முந்தைய ஆதிசிவன் கோயில்: கருநாகம் வந்ததால் பூஜை 500 ஆண்டு முந்தைய ஆதிசிவன் கோயில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்கள் சட்டம்: ரத்து செய்யக் கோரி வழக்கு
எழுத்தின் அளவு:
வழிபாட்டு தலங்கள் சட்டம்: ரத்து செய்யக் கோரி வழக்கு

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
10:06

புதுடில்லி: வழிபாட்டு தலங்கள் தொடர்பான, 1991ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஹிந்து அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஸ்வ பத்ர பூஜாரி புரோகித் மஹாங்க் என்ற ஹிந்து அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள் அனைத்தும், 1947 ஆகஸ்ட், 15ல் இருந்த நிலையிலேயே தொடர வேண்டும் என, வழிபாட்டு தலங்கள் தொடர்பான, 1991ம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், கோவிலை மசூதியாகவும், மசூதியை கோவிலாகவும் மாற்றுவதற்கும் இந்த சட்டம் தடை விதிக்கிறது. இந்தச் சட்டம், மக்களின் வழிபாட்டு சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஹிந்து கோவில்கள் இருந்த இடங்களை, பலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, இந்த சட்டம் தடையாக உள்ளது. ஹிந்து பக்தர்கள், இது தொடர்பாக தங்களது குறைகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். வழிபாட்டு சுதந்திரம் என்பது, இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. இதை மீறும் வகையில், 1991ம் ஆண்டு சட்டம் உள்ளது. எனவே, ஹிந்து பக்தர்கள், தங்கள் வழிபாட்டு தலங்களை, நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக திரும்ப பெறுவதை உறுதி செய்யும் விதமாக, 1991ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மசூதி கட்டுவதற்கு வேறு ஒரு இடத்தில் நிலம் ஒதுக்கும்படியும், உ.பி., அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, காசி மற்றும் மதுராவில் ஹிந்து கோவில்கள் இருந்ததாக கூறப்படும் இடங்களில், மீண்டும் கோவில்களை கட்டும் வகையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, ஹிந்து அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரம் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் எடைக்காக கான்கிரீட் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு  கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என முன்னோர்கள் சொல்வது உண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar