பதிவு செய்த நாள்
13
ஜூன்
2020 
09:06
 
 இந்த மாதம் உங்கள் ராசிக்கு 11ல் இணைந்து இருக்கும் புதன், சூரியன், ராகு  நன்மை தருவார்கள்.  எனவே இது சிறப்பான மாதமாக அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.  பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக  இருப்பர்.
குருபகவான் 6ம் இடத்தில் இருக்கிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. குரு மனஉளைச்சல்,  மனதில் தளர்ச்சியை உருவாக்குவார். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 5ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இதுமிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.  பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். குருவின் 5,7ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவர், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.  ஜூன் 21 முதல் ஜூலை 3 வரை  பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். சகோதரிகள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவியும் தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 
உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.  செவ்வாயால்  ஜூன் 17க்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். புதிய தொழில் முயற்சி  அனுகூலத்தைக் கொடுக்கும்.
* வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். ஜூலை 7க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக வருமானத்தை பெறுவர்.
* தரகு,கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். 
* அரசு பணியாளர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவர். 
* தனியார் துறை பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு திருப்திகரமான சூழ்நிலை அமையும். சீரான வளர்ச்சி காண்பர்.
* மருத்துவர்கள் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில். சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர். 
* ஆசிரியர்கள் ஜூலை 7க்கு பிறகு உன்னதமான பலனைக் காணலாம். எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
* அரசியல்வாதிகளுக்கு வாழ்வில் வசந்தம் பிறக்கும். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசிப்பயறு, நெல், உளுந்து, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள் மூலம்  வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத பிற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும் .வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
* பால்பண்ணை தொழிலில் எதிர்பார்த்த  வருமானம் கிடைக்கும். 
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். ஜூலை 7க்கு பிறகு ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.
சுமாரான பலன்கள்
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். 
* கலைஞர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம்.
நல்ல நாள்: ஜூன் 19,20,21,22,26,27,30 ஜூலை 1,6,7,8,9,10
கவன நாள்: ஜூன் 15 ஜூலை 11,12,13 சந்திராஷ்டமம் 
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்:பச்சை,சிவப்பு
பரிகாரம்:
* செவ்வாயன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை
* கார்த்திகையன்று முருகப்பெருமானுக்கு விரதம்
* பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மன் வழிபாடு