Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி மகரம்: வாகன யோகம் மகரம்: வாகன யோகம்
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை)
தனுசு: வருமானம் உயரும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:41

இந்த மாதம் செவ்வாய் ஜூன் 17 வரையும், புதன் ஜூன் 21ல் இருந்து ஜூலை 3 வரையும் நற்பலன் தரும் இடத்தில் இருக்கின்றனர். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும். ஆனால் சனியின் 3ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள். தொழிலில் அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருவார்.
குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் இருக்கிறார். அவரால் வருமானம் உயரும். தேவையான பொருட்களை வாங்கலாம். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் கலகம், விரோதம் வரலாம். சிலருக்கு மந்த நிலை ஏற்படும். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன.

குடும்பத்தில் தெய்வ அனுகூலம் நிறைந்திருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். ஜூன் 21 –  ஜூலை 3 வரை செய்யும் செயல்கள் வெற்றி பெறும்.  சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அதன்பின் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்களுக்கு பக்தி எண்ணம் அதிகரிக்கும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் சீரான வருமானத்தை பெறுவர். சனியால் உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு ஏற்படலாம். வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உடல்நிலை சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். ஜூன் 17க்கு பிறகு பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும்.  ஜூலை 7க்கு பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் ஆதாயம் அடைவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஜூன் 21 –  ஜூலை 3 வரை அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* வக்கீல்களுக்கு ஜூன் 21 –  ஜூலை 3 வரை சிறப்பான காலகட்டமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் தொழிலில் மேன்மை காண்பர். சக ஆசிரியர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வளர்ச்சியான காலகட்டம். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பர்.  கோரிக்கைகளை ஜூன் 17க்குள் கேட்டு பெறவும்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மஞ்சள், கிழங்கு வகைகள், நிலக்கடலை,  பழவகைகள், காய்கறிகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். சொத்து வாங்க நினைப்பவர்கள் ஜூன் 17க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.
* பால்பண்ணை தொழிலில் வருமானம் திருப்தியளிக்கும். கால்நடை பராமரிப்பு செலவு கட்டுக்குள் இருக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில்  வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் புதிய  முதலீட்டைச் செய்ய வேண்டாம். பகைவர் தொல்லை அவ்வப்போது குறுக்கிடாலம்.  ஜூன் 17க்கு பிறகு நண்பர்களால் பண இழப்புக்கு ஆளாகலாம்.
* தரகு, கமிஷன் தொழிலில் வீண் அலைச்சல் அதிகரிக்கும் சிலர் வெளியூரில் தங்க நேரிடும்.
*  அரசு பணியாளர்களுக்கு கோரிக்கை நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படலாம். பொறுமையும், நிதானமும் தேவை. சிலர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும்.  வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* ஐ.டி., துறையினர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.
* மருத்துவர்களுக்கு ஜூன் 17க்கு பிறகு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகளுக்கு ஜூன்17க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
* பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு.

நல்ல நாள்: ஜூன் 19,20,21,22,28,29,30 ஜூலை 1,4,5,9,10
கவன நாள்: ஜூன் 23,24,25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: பச்சை,மஞ்சள்

பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* பவுர்ணமியன்று அம்மனுக்கு பால் பாயாசம்

 
மேலும் ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை) »
temple
பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே! சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே! பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், ... மேலும்
 
temple
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ... மேலும்
 
temple
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!  சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே! குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். புதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.