கரூர்: அரவக்குறிச்சி அருகே கோவிலூர் மெய்பொருள்நாதர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிபட்டனர். ஆண்டுதோறும் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு கோவிலூர் மெய்பொருள்நாதர் கோவிலில் தேரோட்ட விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மெய்பொருள்நாதர், சவுந்திரநாயகி அம்பாள் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, தேருக்கு எழுந்தருளினார். பிறகு முக்கிய நகர வீதிகள் வழியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து மெய்பொருள்நாதர், சவுந்திரநாயகி அம்மாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.