பதிவு செய்த நாள்
17
ஜூன்
2020
11:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்ளாகவே, ஆனி திருமஞ்சனவிழாவை எளிமையாக நடத்தலாம், ஆயிரங்கால் மண்டபத்திற்குள் சாமியை கொண்டு செல்லக்கூடாது என, சப் கலெக்டர் தெரிவித்துள்ளார். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா , ஆனி மாத த்தில் திருமஞ்சனம் ஆகிய இரு பெரும் த ரிசன விழா நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆனிதிருமஞ்சன விழாவை பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோயிலுக்குள் நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வரும் 19ல் கொ டியேற்றம்; 27ல் தேரோட்டம், 28ல் தரிசனம் நடத்த தீட்சிதர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் சப்கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி ஆணை யர் சுரேந்தர்ஷா, டி.எஸ்.பி., கார் த்திகேயன், தா சில்தார் ஹரிதாஸ் மற்றும் தீட்சிதர்கள் தரப்பில் நடராஜமூர்த்தி, நவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பஞ்சமூர்த்தி வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்திற்கு சாமியை கொண்டுசெல்ல அனுமதி வேண்டும் என, தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சப் கலெக்டர் விசுமகாஜன் பேசுகையில், சாமியை கோயிலை விட்டு வெளியில் கொண்டு செல்லக்கூடாது, கோயிலுக்குள்ளாகவே சுற்றி வ ரலாம். ஆயிரங்கால் மண்டபத்திற்குள் சாமியைகொண்டு செல்லவும், அபிஷேகம் மற்றும் தரிசனம் நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. கோயிலின் கீழ வீதிகோபுர வழியை தவிர மற்ற மூன்று வீதிகளின் கோயில் நுழைவு வாயில் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கோயிலுக்குள் தீட்சதர்கள் கூட்டமாக கூடக்கூடாது, கோயிலுக்குள் செல்பவர்கள் பெயர் பட்டியல் வழங்க வேண்டும் என்றார்.
அதிர்ச்சி அடைந்த தீட்சிதர்கள், கோயில் பொது தீட்சதர்களிடம் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக கூறிவிட்டு சென்றனர். சப் கலெக்டர் உத்தரவால் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வழக்கமாக நடை பெறும் தரிசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அன்புச்செல்வனை , பொது தீட்சிதர்கள் சந்தித்தனர். அப்போது, ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நகர வீதிகள் வழியாக தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனகோரிக்கை வைத்தனர். சிதம்பரம் சப்கலெ க்டரை சந்தித்து பேசும்படி கலெக்டர் அவர்களிடம் கூறிஅனுப்பி வைத்தார்.