Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் புதிய சிவாலயம் கட்டுமான ... திருநள்ளாறு நளன் குளத்தில் தூய்மைப்படுத்தும் பணி திருநள்ளாறு நளன் குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2020
12:06

சித்தூர் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளையொட்டி பல்வேறுகட்ட தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. திருப்பதியிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தொடர்ந்து, பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 6,737 பேர் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். கோவிலில் 2,163 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.38 லட்சத்து 55 ஆயிரம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு வர வேண்டுமென தேவஸ்தான அதிகாரி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், திருப்பதி கோவிலில் அரசு விதிகளின் படி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் , மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

தேவஸ்தானத்தின் மீது சிலர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது முற்றிலும் தவறானது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு பகுதிகளிலும் லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. தற்போது, ஜூன் 30 வரை 300 ரூபாய் தரிசன டிக்கெட் முடிந்து விட்டது. இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஜூன் 22 முதல் 26 வரை 3,750 டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் வழங்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar