காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு கோவில் நளன் குளத்தில் பராமரிப்பு பணி மற்றும் துாய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
கொரோனா தொற்று ஊரடங்கால், இங்குள்ள நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க அரசு தடை விதித்தது. இதனால் கடந்த மார்ச் 13ம் தேதி கோவில் நிர்வாகம் சார்பில் நளன் குளத்திலிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.கடந்த ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் என்று உத்தரவிட்டதால், நளன் தீர்த்தக்குளத்தில் பராமரிப்பு பணி மற்றும் துாய்மைப்படுத்தும் பணிகள் சில தினங்களாக நடக்கின்றன. குளத்தில் ஆழத்திற்காக மணல் அகற்றும் பணி, குளத்தின் நடுவில் உள்ள இரும்புத் தகடுகள் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அரசின் உத்தரவிற்கு பிறகு, குளத்தில் தண்ணீர் நிரப்புவது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.