பதிவு செய்த நாள்
26
ஜூன்
2020
09:06
கோவை : பல்வேறு சமய இசை கலைஞர்களுடன், 21ம் ஆண்டு தியானலிங்கம் பிரதிஷ்டை தின நிகழ்ச்சி, ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள தியானலிங்கம், எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்தன்மையை உணர்வதற்காக, அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டது.1999 ஜூன் 24ல் சத்குரு, பிராண பிரதிஷ்டை செய்தார். இதன் 21வது ஆண்டு, பிரதிஷ்டை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தியானலிங்க கருவறையில், ஈஷா பிரம்மச்சாரிகளின் மந்திர உச்சாடனையுடன், பிரதிஷ்டை தினம் தொடங்கியது. பவுத்தம், கிறிஸ்தவம், சூபி உள்ளிட்ட பல்வேறு சமயத்தினர், தங்கள் சமய உச்சாடனைகளை அர்ப்பணித்தனர். மாலை, நாத ஆராதனை எனும் இசை அர்ப்பணிப்புடன், மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது. பக்தர்களின் வசதிக்காக, மந்திர உச்சாடனைகள் ஆடியோ வடிவில் ஆன்லைன் வாயிலாக, நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.