திருமாலின் சக்கராயுதத்தையே சக்கரத்தாழ்வார் என்னும் பெயரில் வழிபடுகிறோம். இவரை சுதர்சனம் என்று குறிப்பிடுவர். இதற்கு நல்ல காட்சி என்று பொருள். நினைத்தது விரைவில் நிறைவேற சனிக்கிழமையில் 12 முறை வலம் வந்து இவரை வழிபடுவர். துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி கல்கண்டு நைவேத்யம் செய்வது சிறப்பு. இவரை வழிபட வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்
பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்!!