சென்னை : பிராணாயாமம் பயிற்சி கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் அளித்து வருகிறது என யோகா கல்லுாரி முதல்வர் மணவாளன் கூறினார் தமிழகத்தில் கொரோனாவால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.
அவர்களுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையுடன் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அது நல்ல பலன் தந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அரசு யோகா கல்லுாரி முதல்வர் மணவாளன் கூறியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தொடர்ந்து பிராணாயாமம் பயிற்சி மேற்கொண்டால் நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கும். சுவாச பாதைகளும் சீராவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிரநீராவி பிடித்தல் சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்றவையும் அளிக்கப்படுகிறது.இதன் காரணமாக கொரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைந்து வருகின்றனர், என்றார்.