பதிவு செய்த நாள்
05
ஜூலை
2020
10:07
மதுரை; காஞ்சிபுரம் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகள் மடம் சார்பில், தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் இன்று முதல், செப்., 2 வரை வேதவ்யாச பூஜை, சாதுர்மாஸ்ய விரத மகோத்ஸவம், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாக்கள் நடக்க உள்ளன. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இன்று நடத்தப்படும், வேதவ்யாச பூஜை, www.kamakoti.org என்ற, இணையதளம் மற்றும் www.facebook.com/srikamakoti என்ற, பேஸ்புக் பக்கத்தில், காலை, 10:00 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பக்தர்கள் கண்டு இறையருள் பெறலாம் என, மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.