பதிவு செய்த நாள்
05
ஜூலை
2020
11:07
சென்னை :அனைத்திந்திய சாய் சமாஜம் சார்பில், குரு பூர்ணிமா மற்றும் வியாசா பூஜை விழா, பக்தர்களின் வசதிக்காக, யூ டியூப் சானல் மூலம், நேரலையாக இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சென்னை, மயிலாப்பூர், சாய்பாபா கோவிலில், குருபூர்ணிமா விழா ஆண்டுதோறும் விமரிசை யாக நடக்கும்.இந்தாண்டு, அனைத்திந்திய சாய் சமாஜத்தின் சார்பில், குருபூர்ணிமா மற்றும் வியாசா பூஜை விழா இன்று நடத்தப்படுகிறது. தற்போது, ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, குருபூர்ணிமா நிகழ்சி, ALL INDIA SAI SAMAJ என்ற, யூ டியூப் சானலில், ஆன்-லைன் வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று காலை, 9:00 மணிக்கு, குருபூர்ணிமா மற்றும் வியாசா பூஜை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு வேத பாராயணம், சிறப்பு ருத்ரா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 12:00 மணிக்கு ஆரத்தி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சமாஜத்தின் தலைவர் தங்கராஜ், செயலர் செல்வராஜ், பொருளாளர் உமாசங்கர்பாபு உள்ளிட்டோர் செய்துஉள்ளனர்.