அருப்புக்கோட்டை: புராண கதையில் ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. ராவணன் போரில் ஆயுதங்களை இழந்தான். அதனால் ராமர் அவனை மறுநாள் வரும்படி கூறினார். மீண்டும் ராமருடன் போர் செய்ய மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனுடன் போர் செய்ய வந்தான். ராமரை அழிக்க கொடிய யாகம் செய்ய மயில் ராவணன் திட்டமிட்டான். யாகம் நடந்தால் ராமர் லட்சுமணனுக்கு ஆபத்து ஏற்படும் என விபீஷணன் ராமரிடம் கூறினார். அரக்கனை அழிக்க ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார்.
நரசிம்மர், ஹயக்கீரிவர், வராகர், கருடன் ஆகியோரை வணங்கி அந்த தெய்வங்கள் சக்தியுடன் பஞ்சமுகம் விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் என்பது புராண கதை.இப்புகழ்பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் சென்னை அருகில் பஞ்சவடி என்ற இடத்தில் அமைந்துள்ளது. தென் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகில் வெள்ளயைாபுரத்தில் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் கருடர், நரசிம்மர், வராகர், ஹயகீரிவர் ஆகிய தெய்வங்களுடன் காட்சி அளிக்கிறார். இவரை மகாபல ஹனுமந்தன் என்றும் கூறுவர்.
இங்குள்ள ஆஞ்நேயர் வாலை தட்டினால் மணி ஓசை போன்று ஒலிக்கும். பீடத்திற்கு கீழ் 2 கோடி பக்தர்கள் எழுதிய ராமநாமம் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.இதை 12 ஆண்டுக்கு ஒரு முறை எடுத்து பூஜைகள் செய்யப்படுகிறது. அதுவரை பக்தர்கள் ராமநாமம் எழுதி இங்கு வைக்கலாம். நினைத்த காரியம் கை கூடும். ஒவ்வொரு அம்மாவசையன்றும் மிருத்யுஞ்சே ஹாமம், சத்ரு சம்ஹாரம் யாகங்கள் நடக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் நோய் நொடி தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். நெய் விளக்கு, வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுவர். காரிய சித்தி நடக்க நாமும் வெள்ளயைாபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவோமே.