Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: அபார ஆற்றல் மீனம்: குழந்தை பாக்கியம் மீனம்: குழந்தை பாக்கியம்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கும்பம்: சுக்கிரனால் யோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பம்: சுக்கிரனால் யோகம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
02:07

பிறர் மீது குறை காண விரும்பாத கும்ப ராசி அன்பர்களே!


சூரியன், சுக்கிரன், குரு, கேது,சனி மாதம் முழுவதும் நன்மை தருவார்கள்.  செவ்வாய் ஆக.12க்கு பிறகும், புதன் ஜூலை 27க்கு பிறகும், ஆக.12 வரையும் சாதகமான பலன் கொடுப்பர். இதனால் பொருளாதார வளம் கூடும். கிரகங்கள் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்லும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொன், பொருள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர்.
  சுக்கிரனால் யோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினரிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி உண்டு.  ஜூலை 30க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பக்தி எண்ணம் மேலோங்கும். புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.  நீண்ட நாளாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்ப பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்படும் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஆக.12க்கு பிறகு செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை -ஆபரணங்கள் வாங்க வாய்ப்புண்டு.

பெண்களுக்கு குலதெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி பற்றி பேச்சு எழும். ஜூலை 26க்கு பிறகு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.  பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். உடல்நலம் திருப்தியளிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.


சிறப்பான பலன்கள்
* தொழிலில் எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை தரும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள்  ஜூலை 26க்கு பிறகு வீடு திரும்புவர்.
* வியாபாரத்தில் மறைமுகப் போட்டி விலகும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஆக.12 க்கு பிறகு கூடுதல் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
* தரகு,கமிஷன் தொழில் சிறப்பாக இருக்கும். திடீர் வருமானத்திற்கு வாய்ப்புண்டு.
* தனியார் துறை பணியாளர்கள் ஜூலை 26க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  ஒன்று சேருவர்.
* ஐ.டி., துறையினர் நல்ல வளர்ச்சி காண்பர். பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* மருத்துவர்களுக்கு நல்ல பெயரும், மதிப்பும்  ஏற்படும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* வக்கீல்கள் ஜூலை 26க்குப் பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு தடையேதும் இருக்காது. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக. 12க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்
* அரசியல்வாதிகளுக்கு ஆக.12 க்கு பிறகு பணப்புழக்கத்தில் குறையிருக்காது.  எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* கலைஞர்கள் செல்வாக்குடன் திகழ்வர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பாசிப்பயறு, நெல்,  எள்,  கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள்,  பழ வகைகள் போன்றவற்றில் கூடுதல் மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஆக.12க்கு பிறகு கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* பால்பண்ணை தொழிலில் லாபம் உயரும். கால்நடைச் செல்வம் பெருகும். ஆக.12க்கு பிறகு ஆடு வளர்ப்பில் நல்ல வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். தீய சகவாசத்திற்கு விடை கொடுப்பர். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

  

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்
* அரசு பணியாளர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். யாருடைய உதவியையும் நாடாமல் தன்கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள்.
* தனியார் துறை பணியாளர்கள்  ஆக.12க்கு பிறகு பணிச்சுமைக்கு ஆளாகலாம். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
 நல்ல நாள்: ஜூலை 21,22,23,24,29,30,31 ஆக. 1,2,5,6,10,11
 கவன நாள்: ஜூலை 25,26 சந்திராஷ்டமம்
 அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்.


பரிகாரம்:

* செவ்வாயன்று முருகப்பெருமான் வழிபாடு
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் விரதம்
* சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய் தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar