சூலூர்: ஆடி வெள்ளியை ஒட்டி முத்துக் கவுண்டன்புதூர் அங்காளம்மன், காய்,கனி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சூலூர் அடுத்த மு.க., புதூர் அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆடி வெள்ளியை ஒட்டி, நேற்று முன்தினம் அம்மனுக்கு, சிறப்பு, அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, காய், கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு, அம்மன் அருள்பாலித்தார். ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.