திருக்கோவிலூர்: அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான ஸ்தலமாகும். நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு அதுல்யநாதேஸ்வரர், சவுந்தரிய கனகாம்பிகைக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு நந்திகேஸ்வர பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்காரம், அதுல்யநாதேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு ஒருசேர மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார் மட்டுமே நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.