அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி யாகம் நடக்கிறது. குருபகவான் வரும் 17ம் தேதி மாலை 6.27 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலச மகா யாகம், அன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து 6.27 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. குரு பெயர்ச்சியினால் கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் பலன் பெறுகின்றன. மற்ற 9 ராசிக்காரர்களும் பரிகாரமாக தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை இறை பணி மன்றத்தினர் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.