பதிவு செய்த நாள்
20
ஜூலை
2020
12:07
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ருத்ரலிங்கேஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், அமணீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லாததால், கோவில்களில் கூட்டம் இல்லை.கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டி, மலைக்குன்று மல்லேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாட்டில், மல்லேஸ்வரர், மல்லேஸ்வரிக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.இதில், பால், பன்னீர், எலுமிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. இதேபோன்று, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.உடுமலைஉடுமலையில், பிரசன்னவிநாயகர் கோவில், தில்லைநகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், போடிபட்டி காரிய சித்தி விநாயகர் கோவில் உள்பட பல்வேறு சிவன்கோவில்களில், சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடந்தது.