பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று இறந்த முன்னோர்களுக்கு கோவில் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்து திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
அதிகாலை 4 மணிக்கு துவங்கும் பூஜை பிற்பகல் 11 -30 மணி வரை நடைபெறும். இதில் கூடலூர், பந்தலூர் மற்றும் வயநாடு எல்லைப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள். தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோவில்களில் பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இங்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. எனினும் நேற்று காலை அதிகளவான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் போலீசார் வரவழைக்கப்பட்டு கோவில் இழுத்து மூடப்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பாக காணப்படும் கோவில் வளாகம் காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது.