கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடந்த புற்றுக்கண் மாரியம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கெங்கவல்லி அருகே நடுவலூரில், பிரசித்தி பெற்ற புற்றுக் கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று அதிகாலை 4 மணியளவில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.ஸ்வாமிக்கு பொங்கல் படையல் செய்து மாவிளக்கு பூஜையுடன் வழிபாடு செய்தனர். பின், அக்னி சட்டி எடுத்தல், பல்வேறு வகையான அலகு குத்தி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.