நீலமங்கலம் சிவன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 10:05
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் சிவன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று முன்தினம் இரவு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். பெண்கள் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலை கோபாலன் ருத்ர மந்திரங்களை வாசித்து வழிபாடு நடத்தினார்.