பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
தர்மபுரி: தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனமர் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில், வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் 11.30 மணி வரையில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 17ம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு, குரு பெயர்ச்சி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரையில் கணபதி, நவக்கிரஹ, குரு சாந்தி பரிகார ஹோமங்கள் சிறப்பாக நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மஷா அபிஷேகம், 36 வகையான பொருட்கள் குரு பகவானுக்கு சாந்தி கலச அபிஷேகமும் சரியான மாலை 6.18 மிக்க ஸ்வர்ண அபிஷேகமும் மாலை 6.18 மணிக்கு ஸ்வர்ண அபிஷேகமும், வெள்ளி கவசம் சாத்துதலும் நடக்கிறது. சிறப்பு வழிபாடு மற்றும் கூட்டு வழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெறலாம். பக்தர்கள் மஹா அபிஷேகத்துக்கு வரும் போது, பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர், கரும்பு சாறு ஆகியவை பொருட்களை கொண்டு வரலாம். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் முருகன், தக்கர் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ், கோவில் அர்ச்சகர் செல்வமுத்து குமாரசாமி சிவாச்சாரியார் மற்றும் ஆலய சுந்தரர் வழிபாட்டு பக்த பேரவையினர் செய்கின்றனர்.