அரங்கேற்ற அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் மே 31ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 10:05
மண்ணச்சநல்லூர்: மிகவும் பழமையான திருப்பட்டூர் அரங்கேற்ற அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் மே 31ல் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள அரங்கேற்ற அய்யனார் கோவில் புறநானூற்று பாடலில் குறிப்பிடப்பட்ட மிகவும் பழமையான கோவிலாகும். மதுரை நக்கீரனார் 395 பாடலில் இக்கோவிலை பற்றிக் குறிப்பிடுகிறார். சேக்கிழாரும் இக்கோவிலை பற்றி பெரிய புராணத்திலும் குறிப்பிடுகிறார். சோழர்கள் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன. மிகவும் பழமையான இக்கோவில் பராமரிப்பின்றியும் வழிபாடு இன்றியும் சிதிலமடைந்து இருந்தது. இத்திருக்கோவில் புணரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. மே 25ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. மே 31ம் தேதி காலை 10.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டல அமைப்பாளர் கிருஷ்ணன் செய்து வருகிறார்.