பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
05:07
ஹிந்துக்களின் கடவுளான முருகப்பெருமான், சுப்பிரமணியன், ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன் என்னும் பல பெயர்களால் வழிபடப்படுகிறார். இலங்கையிலுள்ள சிங்களர்களுக்கும் முருகன் இஷ்ட தெய்வம் ஆவார். கம்போடியா, வியட்நாம், திபெத் நாடுகளில் புத்தமதம் பரவுவதற்கு முன் அங்குள்ள கோயில்களில் முருகன் சிற்பங்கள் இருந்தன. சீனாவின் மஞ்சூரியா குகையில் அவர்கள் வழிபட்ட தெய்வங்களின் ஓவியங்களாக இருந்தன. அதில் ஆறுமுகமும், மயில் வாகனத்துடன் ஒரு தெய்வம் இருப்பதைக் காணலாம். அதை ‘மஞ்சுஸ்ரீ’ என அழைத்தாலும் அதன் கதை முருக வரலாறாகவே உள்ளது. அரேபியாவைச் சேர்ந்த யாசிடி மக்களிடம் மயில் மீது அமர்ந்த கடவுளும், அவரது காலடியில் பாம்பும் இருக்கும் சிலைகள் இருந்தன. ‘கதிர்காமன்’ எனும் பெயரே அங்கு ‘அல்கதிர்’ எனப்படுகிறது. இஸ்ரேலில் முருக வழிபாடு இருந்ததை அந்நாட்டுக் கொடியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் காட்டுகிறது.
ஆசியா எங்கும் பரவியிருந்த முருகவழிபாடு புத்தர் காலத்தில் உருமாற்றபட்டது. முருகன் கோயில்கள் எல்லாம் புத்த விகாரைகளாக மாறின. பின்னர் முருகன் அங்கு காவல் தெய்வமாக மாறினார். முருகனின் வரலாறை ‘குமார சம்பவம்’ என்னும் காவியமாக மகாகவி காளிதாசர் வடமொழியில் எழுதினார். அந்த முருகனையே தமிழில் அகத்தியரும், அவ்வையாரும் பாடினர். ராம் என்பது ராமன் என்றும், கிருஷ்ணன் என்பது கண்ணன் என்றும் ஆனது போல ஸ்கந்தன் என்பதே தமிழில் முருகன் என்றானது.