சிறியவர், பெரியவர் யாராக இருந்தாலும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அது நியாயமானதாக இருந்தால் நிறைவேற்றுவதில் நாயகம் முன்மாதிரியாக திகழ்ந்தார் என்கிறார் ஆயிஷா. ஒருநாள் சூடான் நாட்டினர் போர்க் கருவிகளை வைத்து விளையாடினர். நாயகம் என்னிடம், ‘‘ ஆயிஷா... போர் விளையாட்டை நீ பார்க்க விரும்புகிறாயா?’’ எனக் கேட்டார். தலையசைத்தேன். தமக்குப் பின்புறமாக என்னை நிற்க வைத்தார். பின்னர் அவர்களிடம், ‘‘ மக்களே! விளையாட்டைத் தொடங்குங்கள்’’ என தெரிவித்தார். நீண்டநேரம் கழித்து, ‘‘உனக்கு போதும் தானே?’’ எனக் கேட்டார். ‘‘ஆம்’’ என்று தலையசைத்தேன். அப்படியானால் வீட்டுக்குள் போகலாம் என அனுமதியளித்து விலகினார்.