* உண்மையை மறைத்து பொய் கூறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை. * போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம். * செல்வம் என்பது பொருட்களை அதிகமாக சேர்த்து வைப்பது அல்ல. * தீர விசாரித்து பொறுமையுடன் தர்மவழியில் தீர்ப்பளியுங்கள். * செல்வச் செழிப்பிலும் இறைவனை நினைக்க மறவாதே. * யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்த உணவாக இருந்தாலும் சரியே. * பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள். * பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல. * வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான். * ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். பொன்மொழிகள்