சூலூர், ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தை ஒட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, ஆடி வெள்ளியும், ஆடிப்பூரமும் ஒரு சேர வந்ததால், சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் சிறப்பாக நடந்தன. கிராமக்கோவில்களில் பெண்கள் அதிகளவில் சென்று வழிபட்டனர். முத்துக்கவுண்டன்புதூர், சூலூர், இருகூர் அங்காளம்மன் கோவில்கள், ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன் கோவில், மாதப்பூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.