பதிவு செய்த நாள்
26
ஜூலை
2020
11:07
ராமநாதபுரம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிேஷகபூஜைகள் நடந்தது.
சேதுபதிநகர் மல்லம்மாள் காளியம்மன் கோயில், முகவை ஊரணி ராஜகாளியம்மன் கோயில், ஓம்சக்திநகர் ஒத்த பனைமரத்து காளியம்மன் கோயில், அல்லி கண்மாய் ராஜமாரியம்மன் கோயில், வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடிப்பூரம், வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு வளையல், கூழ்பிரசாதமாக வழங்கப்பட்டது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் மஞ்சமாதா சன்னதியில் மூலவர் அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 11 வகையான அபிஷேக, ஆராதனைகளும், சர்வ மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சாமி செய்திருந்தார். கொரோனா வைரசில் இருந்து உலகம் மீள பிரார்த்தனை நடந்தது. பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.