கொரோனா ஒழிய நாச்சியார் கோவிலில் கல்கருடனுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2020 04:07
தஞ்சாவூர், நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவிலில், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஒழிய வேண்டி கல்கருடனுக்கு இன்று (28ம் தேதி) சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவ்டடம் நாச்சியார் கோவிலில் மஞ்சுளவல்லி சமேத சீனிவாசப்பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாளை திருமங்கையாழ்வார் நுாற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்களால் பாடி வழிபாடு செய்த சிறப்பு பெற்ற தலமாகும். இத்தலத்தில் தனி சன்னதி கொண்ட கல் கருட பகவானுக்கு ஆறுகால பூஜைகளுடன் அனைத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பங்குனி மற்றும் மார்கழி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பிரம்மோத்சவத்தின் நான்காம் திருநாளாக கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். கருடனின் ஜென்ம தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு இன்று (28ம் தேதி) சகஸ்ரநாம அர்ச்சனை, கருட மூலமந்திரம், ஹோமம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. அப்போது உலகினை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முற்றிலும் நீங்க வேண்டி பூஜையின் போது சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.