பதிவு செய்த நாள்
29
ஜூலை
2020
11:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை ஜோதி விநாயகர் கோவில் தெருவிலுள்ள, முத்து மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விமர்சையாக திருவிழாவை நடத்தாமல், கோவில் அமைந்துள்ள தெருவில் உள்ள பக்தர்கள் மட்டும் பங்கேற்று, திருவிழாவை நடத்தினர். இதையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். மேலும், பக்தர்கள் அலகு குத்திக் கொண்டும், தீச்சட்டி ஏந்தியும் கோவிலை சுற்றி வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். அத்துடன், பூசாரி கரகம் சுமந்து கோவிலைச்சுற்றி வலம் வந்தார். நிகழ்ச்சியில், பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.