கேட்கவும், பதில் சொல்லவும் சுலபமான விஷயமாகத் தோன்றும். ஆனால் பிறவிக்குணமாக அகந்தை கொண்டவர்கள் தீயகுணத்தைப் போக்க முடியாமல் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு அவதிப்படுவதை காண முடிகிறது. நாயன்மார், ஆழ்வார்களின் வரலாறு மூலம் பக்தனுக்காக கீழே இறங்கி வந்து கடவுள் அருள்புரிவதை ஆழ்மனதில் பதிய வைத்து பழகினால் அகந்தை குணம் மறையும்.