Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயக்கன்பாளையம் அம்மன் ... குமரியில் பக்ரீத் கொண்டாட்டம் குமரியில் பக்ரீத் கொண்டாட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் களைகட்டிய வரலட்சுமி நோன்பு: கொரோனா முடக்கத்திலும் கமழ்ந்த பக்தி மணம்
எழுத்தின் அளவு:
வீடுகளில் களைகட்டிய வரலட்சுமி நோன்பு: கொரோனா முடக்கத்திலும் கமழ்ந்த பக்தி மணம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
10:08

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, மாநிலம் முழுதும், பல்வேறு வீடுகளில், வரலட்சுமி விரதத்தைப் பெண்கள் ஏராளமானோர் கடைபிடித்தனர். இதனால், கிராமம், நகரம் என அனைத்துப்பகுதிகளிலும், ஆன்மிக மணம் கமழ்ந்தது.நேற்றுமுன்தினம் இரவே,நோன்பு கடைபிடிக்கப்பட்ட வீடுகள் சுத்தம் செய்யப்பட்டன. மாக்கோலமிட்டு, மாவிலைத்தோரணங்கள் கட்டப்பட்டன.


வீட்டின் தென் கிழக்கு மூலையில் சாணம் தெளித்து, கோலமிட்டு, தலைவாழை இலையில், ஒரு படி அரிசியைப் பரப்பி வைத்தனர். பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,நாணயங்கள், எலுமிச்சை, கருகமணி, வாசனை திரவியங்கள் போன்றவையிடப்பட்டன.இக்கலசத்தின் வாய்ப்பகுதியில் மாவிலை மீது தேங்காய் வைத்தனர். தேங்காயில், மஞ்சள் பூசப்பட்டு, குங்குமிடப்பட்டு, அம்மன் திருமுகம் நோக்கி வைக்கப்பட்டது.இன்று அதிகாலை முதல் பெண்கள் விரதத்தை துவக்கினர். அம்மனுக்கு பல்வகை சாதங்கள், பாயசம், வடை, கொழுக்கட்டை, பசும்பால், தயிர், நெய், தேன் போன்றவை நைவேத்தியம் செய்யப்பட்டன.மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து, பூஜை செய்து. பின், கணவரிடம் கொடுத்தோ, மூத்த சுமங்கலி பெண்களைக் கட்டிவிடச் சொல்லியோ, பெண்கள் ஆசிர்வாதம் பெற்றனர். அனைத்து சுமங்கலிப்பெண்களுக்கும், நோன்பு கயிறுகள், புடவை போன்றவற்றை வழங்கினர்.பெண்கள் கூறுகையில், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, திருமணப்பேறு, சுமங்கலி வரம் எனப் பல்வேறு நன்மைகளையும், வெற்றிகளையும் வரலட்சுமி நோன்பு அளிக்கிறது. கொரோனா நீங்கி, நாடு செழிக்க வேண்டும் என்று வரலட்சுமியிடம் இந்த முறை வேண்டினோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar