Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கல்வித்திருநாளான ஆவணி ... ஆடிப்பெருக்கில் காவிரி வெறிச் ஊரடங்கால் முடங்கிய மக்கள் ஆடிப்பெருக்கில் காவிரி வெறிச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜொலிக்கிறது அயோத்தி: ஆக.,5ல் பூமிபூஜை
எழுத்தின் அளவு:
ஜொலிக்கிறது அயோத்தி: ஆக.,5ல் பூமிபூஜை

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
08:08

அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி அயோத்தி நகரமே வண்ண விளக்குகள், தோரணங்களால் ஜொலிக்கிறது.

உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுதினம் நடக்கிறது. இதையொட்டி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்கு களாலும் தோரணங்களாலும் ஜொலிக்கிறது.

விழாவில் பிரதமர் மோடி உட்பட 200 வி.வி.ஐ.பி.க்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை வைத்து பகல் 12:15 மணியளவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியுடன் மேடையில் நான்கு பேர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பா.ஜ. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அறக்கட்டளை நிர்வாகிகள் அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தனர். இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்க உள்ளனர். மஹாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்காக எங்களது ரத்தத்தையும் சதையையும் நாங்கள் கொடுத்துள்ளோம். அதனால் உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

நிகழ்ச்சிகள் இன்று துவக்கம்: பூமி பூஜைக்கான நிகழ்ச்சிகள் அயோத்தியில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. இதற்காக வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம் முழுதும் கோயில்களில் நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு பூஜைகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar