தேவிபட்டினம்,:பனைக்குளம் அருகே ஆற்றாங்கரையில்உள்ள உஜ்ஜயினி காளியம்மன் கோயிலில்ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மாங்கல்ய பூஜை நடந்தது. உஜ்ஜயினி காளியம்மனுக்கு 18 வகை அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. கும்ப கலச பூஜை, ஹோம வேள்விகள் நடத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் பங்கேற்ற பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் நடைபெற்றன. உலக நன்மை வேண்டி சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.