மானாமதுரை: மானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழாவில் பக்தர்கள் இல்லாமல் திருக்கல்யாணம் நடைபெற்றது. மானாமதுரை வீரழகர் கோயிலில் வருடந்தோறும்சித்திரைத் திருவிழா, ஆடி பிரமோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தக்கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா பக்தர்கள்பங்கேற்பு இல்லாமல் கோயிலில் வழக்கமான பூஜை மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வீர அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.பின்னர் பட்டர்கள் திருமணத்துக் கான சம்பிரதாய பூஜைகளை நடத்தி வைத்து சவுந்திரவல்லித்தாயார் சன்னதியிலிருக்கும் உற்ஸவருக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.