ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு திண்டுக்கல்லில் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2020 03:08
திண்டுக்கல்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக திண்டுக்கல்லில் சிறப்பு பூஜை நடந்தது. அயோத்தியில் ஆக.5ம் தேதி ராமர்கோவில் அடிக்கல் நாட்டுதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு பிரமாண்டமாக நடந்து வருகிறது.இதையடுத்து திண்டுக்கல்லில் வீரதிம்முஅம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு ஆகியவை சார்பில் பாலகிருஷ்ணாபுரம் ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.விஸ்வஹிந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.