பதிவு செய்த நாள்
04
ஆக
2020
03:08
கொரோனா ஊரடங்கு தளர்வில், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், சிறிய கோவில்கள் உட்பட வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகிகள், அந்தந்தப்பகுதி சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து, வழிபாட்டுத்தலங்களை திறக்க முறைப்படி, அனுமதி பெற வேண்டும் என்றனர்.கிருமிநாசினி தெளிப்புஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி சார்பில், நேற்று மக்கள் கூடும் இடம், அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. 17 வாகனங்கள் மூலம், புஷ்பா ஜங்ஷன், மார்க்கெட், ரயில்நிலையம் முன்புறம், கடை வீதி மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தாலுகா ஆபீஸ் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நிலுவை தொகை வழங்கணும்தி.மு.க., உயர் நிலைக்குழு உறுப்பினர் சாமிநாதன், கலெக்டருக்கு அனுப்பிய மனு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு சங்கங்களில், பால் வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு, கடந்த, 40 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் பணம் வழங்கப்படவில்லை. மேலும், 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளுக்கு தீவனம் வாங்கக்கூட வழியின்றி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.காமராஜர் பெயர் வைக்கணும்த.மா.கா., திருப்பூர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோர் பெயர் சூட்டப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில், கல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்களை தந்து, மக்கள் சேவைக்காக தன்னை அர்பணித்த முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். இக்கோரிக்கையை முதல்வர் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்ரூ. 4 கோடிக்கு விற்பனைதிருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு, ஜூன் மாதம், 782 டன் காய்கறி வந்தது. 2.21 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. 2,860 விவசாயிகள், 93 ஆயிரத்து 850 நுகர்வோர் வந்தனர். ஜூலை மாதம், 669 டன் காய்கறி வந்தது. 1.91 கோடி மதிப்பில் காய்கறி விற்கப்பட்டன. 2,416 விவசாயிகள், 88 ஆயிரத்து 738 நுகர்வோர் வந்துள்ளனர். கடந்த இரு மாதத்தில், 4.13 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,451 டன் காய்கறி வரத்தாக இருந்தது.