மல்லல் அருகே புத்தர் சிலை கோயில் கட்ட மக்கள் முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2020 03:08
சிப்காட்:மானாமதுரை அருகே உள்ள மல்லல் காட்டு பகுதியில் கிடைத்த 10ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்த மல்லல் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். மல்லல் காட்டுபகுதியில்புத்தர் சிலை 3 அடி உயரத்தில் உட்கார்ந்து தியான நிலையில் உள்ளது. இந்த சிலையை பல முறை தோண்டி எடுக்க முயற்சி செய்தும் எடுக்க முடியாததால் அதனை விட்டு சென்றதாக கூறுகின்றனர்.
இந்த புத்தர் சிலையை வைத்து கோயில் கட்டுவதற்காக தற்போது ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு சங்குதுரை, முத்துச்சாமி, ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, ஆய்வாளர் வேலுசாமி ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு நேற்று முதல் பவுர்ணமி தின புத்த வந்தன நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகி கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி கூறுகையில் பழமை வாய்ந்த புத்தர் சிலையை இந்த பகுதி முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து தற்போது நாங்களும் மாதந்தோறும் பவுர்ணமிஅன்று வழிபாடு நடத்தி வருகிறோம். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்களிடம் நிதி பெற்று விரைவில் கோயில் கட்ட முடிவு செய்துஉள்ளோம், என்றார்.